செய்திகள்

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 மாற்றுபாலினத்தவர்கள்

Published On 2018-05-25 05:52 GMT   |   Update On 2018-05-25 05:52 GMT
பாகிஸ்தான் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் முதல்முறையாக 13 மாற்றுப்பாலினத்தவர்கள் போட்டியிடுகின்றனர். #transgender #PakistanElection
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் வருகிற ஜூலை மாதம் பாராளுமன்ற தேர்தலும் அதை தொடர்ந்து மாகாண சட்ட சபை தேர்தலும் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகளும், பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷனும் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் அங்கு நடைபெற உள்ள தேர்தலில் உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்து பெண்ணாக இருந்து ஆணாகவும் மற்றும் ஆணாக இருந்து பெண்ணாகவும் மாறிய 13 பேர் போட்டியிடுகின்றனர்.

அவர்களில் 2 பேர் பாராளுமன்ற தேர்தலிலும், 11 பேர் மாகாண சட்டசபை தேர்தலிலும் போட்டியிடுகின்றனர். அதற்கான அறிவிப்பை உறுப்பு மாற்று ஆபரேசன் செய்தோருக்கான தேர்தல் பிரிவு அறிவித்துள்ளது.



உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்தோர் தேர்தலில் போட்டியிட வேண்டிய முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு உரிய உத்தரவு கிடைக்காததால் 4 பேர் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டனர்.#transgender #PakistanElection
Tags:    

Similar News