செய்திகள்

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆலோசகர் அமெரிக்காவுக்கு ரகசிய பயணம்

Published On 2018-05-04 10:32 GMT   |   Update On 2018-05-04 10:32 GMT
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பை முன்னிட்டு தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார். #MoonAdviser #USvisit #KimTrumpSummit
சியோல் :

வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்து வந்த பதற்றம் சமீபத்தில் தணிந்தது. இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசிய பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் விரைவில் சந்தித்து உயர்மட்ட ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனைக்கான தேதியும் இடமும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், தென் கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுங் யூய் யாங் அமெரிக்காவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் வாஷிங்டன் நகரை வந்தடைந்த செய்தியை இருநாட்டு தூதரக வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்தித்து பேசும்போது தென் கொரியாவின் சார்பில் வைக்கப்படவேண்டிய நிபந்தனைகள் தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு அலோசகர் ஜான் போல்டன் உடன் சுங் யூய் யாங் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #MoonAdviser #USvisit  #KimTrumpSummit
Tags:    

Similar News