செய்திகள்

சீக்கிய திருவிழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்ற இந்திய வாலிபர் மாயம்

Published On 2018-04-22 08:16 GMT   |   Update On 2018-04-22 08:16 GMT
பாகிஸ்தானில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற குருநானக் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து சென்ற சீக்கிய வாலிபர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்:

சீக்கிய மதத்தை தோற்றுவித்த முதல் குருவான குருநானக் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 15-4-1469 அன்று பிறந்தார். குருநானக் பிறந்த பகுதி அவரது நினைவாக நான்கானா சாகேப் மாவட்டமாக அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் தலைநகராக விளங்கிவரும் குருநானக் நகரில் பிரமாண்டமான சீக்கிய ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயம் உலகம் முழுவதும் வாழும் சீக்கியர்களின் புனிதத்தலமாக மதிக்கப்படுகிறது. ‘பைசாக்கி’  பண்டிகையையொட்டி இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் உலக நாடுகளில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் வந்து கலந்துகொள்வதுண்டு.

அவ்வகையில், 12-4-2018 அன்று நடைபெற்ற பைசாக்கி திருவிழாவில் கலந்துகொள்ள பாகிஸ்தானுக்கு சென்ற 33 வயது இந்து விதவைப்பெண் சமூகவலைத்தளத்தில் தனக்கு அறிமுகமான இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டார் என்ற அதிர்ச்சி செய்தி சமீபத்தில் வெளியானது.



இந்நிலையில், இவ்விழாவில் பங்கேற்க இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் இருந்து சென்ற யாத்ரீகர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த 24 வயது சீக்கிய மாணவர் காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.

பைசாக்கி பண்டிகையையொட்டி பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோயிலுக்கு யாத்திரை சென்ற குழுவினருடன் கடந்த 12-ம் தேதி கிரண் பாலா என்ற 33 வயது விதவைப் பெண் பாகிஸ்தானுக்கு வந்தார். மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர், பேஸ்புக் மூலம் தனக்கு முன்னரே அறிமுகமான ஹிங்கர்வால் பகுதியை சேர்ந்த பாகிஸ்தானியரான முஹம்மது அசாம் என்பவரின் மனைவியாகும் நோக்கத்தில் முஸ்லிமாக மாறினார்.

தனது பெயரை அம்னா பீவி என்று மாற்றிகொண்டு, இஸ்லாமிய முறைகளின்படி கடந்த 16-ம் தேதி திருமணமும் செய்து கொண்டார்.



இந்தியாவை சேர்ந்த பெண்ணான இவருக்கு யாத்திரை செய்வதற்காக பாகிஸ்தான் அரசு அளித்திருந்த விசா அனுமதி கடந்த 21-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இந்த நாட்டை சேர்ந்தவரை நான் திருமணம் செய்துள்ளதால் எனக்கு பாகிஸ்தானில் வாழும் குடியுரிமை வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என லாகூர் ஐகோர்ட்டில் அம்னா பீவி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க சிலர் மூளைச்சலவை செய்திருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த இன்னொரு வாலிபரும் பாகிஸ்தானில் மாயமாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.#tamilnews
Tags:    

Similar News