செய்திகள்

ரஷியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2018-04-21 23:07 GMT   |   Update On 2018-04-21 23:07 GMT
ரஷியாவின் டாக்ஸ்டேன் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட 9 பேரை போலீசார் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. #Russia #Dagestan #militantskilled

மாஸ்கோ:

ரஷியாவின் டாக்ஸ்டேன் பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்நிலையில், இப்பகுதியில் அமைதியை சீர்குலைப்பதற்காக சில பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அவர் பதுங்கியிருக்கும் இடங்கள் பற்றியும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள டெர்பெண்ட் நகரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் இருண்டு இடங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களை சரணடையுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில், போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதுப்பும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் அடுத்த மாதம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. #Russia #Dagestan #militantskilled
Tags:    

Similar News