செய்திகள்

டிரம்ப்புடன் நைஜீரியா அதிபர் முஹம்மது புகாரி 30-ம் தேதி சந்திப்பு

Published On 2018-04-16 11:34 GMT   |   Update On 2018-04-16 11:34 GMT
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் - நைஜீரியா அதிபர் முஹம்மது புகாரி இடையிலான சந்திப்பு வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளது.
வாஷிங்டன்:

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சில நாடுகளை அறுவறுக்கத்தக்க நாடுகள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டதாக கடந்த ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகின. இதை டிரம்ப் மறுத்திருந்தார். இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கடந்த மார்ச் மாதம் நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், நைஜீரியா அதிபர் முஹம்மது புகாரி வரும் 30-ம் தேதி அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப்-பை சந்தித்து இருநாடுகளின் இடையிலான பல்வேறு நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

நைஜீரியா முன்னாள் ராணுவ சர்வாதிகாரியான முஹம்மது புகாரி கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த தேர்தலிலும் போட்டியிடப் போவதாக சமீபத்தில் இவர் அறிவித்தது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News