செய்திகள்

சிரியா குண்டு வீச்சுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

Published On 2018-04-16 06:28 GMT   |   Update On 2018-04-16 06:28 GMT
ரசாயன இடங்களை குறிவைத்து சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. #SyriaStrikes
நியூயார்க்:

சிரியா மீது கடந்த 13-ந்தேதி இரவு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் இணைந்து ராக்கெட் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கூட்டாவில் துமா நகரை கைப்பற்ற சிரியா ராணுவம் அங்கு ரசாயன தாக்குதல் நடத்தியது. அதில் 70 பேர் பலியாகினர்

அதற்கு முடிவுகட்டும் நோக்கத்தில் அதிபர் ஆசார் -அல்-ஆசாத்துக்கு எதிராக இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் ரசாயன ஆயுத கிடங்குகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிலைகளை குறிவைத்து 100-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டன.

சிரியா மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நியூயார்க்கில் யூனியன் சதுக்கத்தில் ஏராளமானோர் திரண்டு குண்டு விச்சுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் நியூயார்க் சிட்டி பல்கலைக்கழகத்தின் கியூன்ஸ் கல்லூரி பேராசிரியர் லார்டன் பிரான்ஸ் கலந்து கொண்டார். அவர் கூறும் போது, அமெரிக்காவின் ராணுவ தாக்குதலால் சிரியாவில் பிரச்சினையை தீர்க்க முடியாது. எனவே இத்தாக்குதலை எதிர்க்கிறேன். மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா தேவையின்றி தலையிடுவது இது ஒரு உதாரணம் ஆகும்.

அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை ஆதரிக்கிறேன். சிரியா மட்டுமின்றி மற்ற நாடுகளில் இருந்தும் அகதிகள் வருவதற்கு அமெரிக்காவும் ஒரு காரணம். தற்போது நடத்தப்பட்டுள்ள குண்டு வீச்சில் அப்பாவி பொது மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்’’ என்றார். இதே கருத்தை போராட்டத்தில் கலந்துகொண்ட பலரும் தெரிவித்தனர். #Syria #SyriaStrikes #SyriaAirStrikes
Tags:    

Similar News