செய்திகள்

சிங்கப்பூர்: உதவி கேட்ட சிறுமியுடன் பாலியல் உறவு - இந்திய வம்சாவளி வாலிபருக்கு 18 மாதம் சிறை

Published On 2017-12-13 09:32 GMT   |   Update On 2017-12-13 10:05 GMT
சிங்கப்பூரில் கைபேசி வாங்க உதவி கேட்ட சிறுமியுடன் பாலியல் உறவு வைத்ததுடன் பணம் தராமல் ஓடிப்போன இந்திய வம்சாவளி வாலிபருக்கு 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர்:

சிங்கப்பூரை சேர்ந்த 14 வயது மாணவி புதியரக செல்போன் வாங்குவதற்கு ஆசைப்பட்டார். இதற்காக தனது நட்பு வட்டாரங்களிடம் உதவிகேட்டு சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

இதை அந்தப் பெண் வசிக்கும் பகுதியின் அருகாமையில் இருந்த ஹரி குமார் அன்பழகன் என்ற வாலிபர் சமூக வலைத்தளத்தின் மூலம் அறிந்துகொண்டு அவரை நாடினார்.

கடந்த ஆண்டு மே மாதம் அந்த சிறுமியை நேரில் சந்தித்த ஹரி குமார், நான் உனக்கு செல்போன் வாங்க 70 டாலர் பணம் தருகிறேன். பதிலுக்கு நீ உன்னை தருவாயா? என்று பேரம் பேசினார். இருவரும் ஒப்புகொண்டு உல்லாசமாக இருந்த பின்னர், வாக்குறுதி அளித்தபடி பணத்தை தராமல் தனது வேலை முடிந்தவுடன் ஹரி குமார் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் நடவடிக்கைகளில் புதிய மாற்றத்தை உணர்ந்த பள்ளி ஆசிரியைகள் போலீசில் அளித்த புகாரின்பேரில் அந்த மாணவியின் கைபேசியில் இருந்த அழைப்பு எண்கள் மற்றும் குறுந்தகவல்களை ஆய்வு செய்த போலீசார் நடந்ததை தெரிந்து கொண்டனர். ஹரி குமார் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக, மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் நீதிபதி கென்னத் யாப் நேற்று தீர்ப்பளித்தார்.

18 வயதை அடையாத பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் குற்றவாளி ஹரி குமார் அன்பழகனுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Tags:    

Similar News