செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ மேயர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

Published On 2017-11-22 12:04 GMT   |   Update On 2017-11-22 12:04 GMT
பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ராணுவ மேயர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பகதுன்க்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர்.



இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ராணுவ மேயர் இஷாக் மரணமடைந்தார். 28 வயதான இஷாக் பாகிஸ்தானுக்கு சொந்தமான பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர். இவருக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. அவருடைய உடலுக்கு தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இறுதி மரியாதை செய்யப்பட்டது. இதில் ராணுவ ஜெனரல் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள தேரா மாவட்டம் வடக்கு மற்றும் தெற்கு வசிரிஸ்தான் பழங்குடி இன மக்களுக்கு பாதையாக இருந்து வருகிறது. இந்த மாவட்டம் உள்ளூர் மற்றும் அயல்நாட்டு தீவிரவாதிகளின் உறைவிடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் நடைபெற்று வரும் சண்டையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இஷாக் உட்பட 4 ராணுவ மேயர்கள் கொல்லப்பட்டனர்.
Tags:    

Similar News