இந்தியா

ரொட்டிக்கடை நடத்தும் 10 வயது சிறுவன்

Published On 2024-05-07 08:43 GMT   |   Update On 2024-05-07 08:43 GMT
  • வீடியோ இணையத்தில் வைரலாகி 96 லட்சம் விருப்பங்களை குவித்தது.
  • வீடியோவை பார்த்த பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா சிறுவனுக்கு உதவ முன் வந்தார்.

டெல்லியின் கிழக்கு விஹார் போலீஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் ரொட்டிக்கடை நடத்தும் 10 வயது சிறுவன் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிது.

சரப்ஜித் சிங் என்ற உணவு பதிவர் ஒருவர் அந்த கடைக்கு சென்றுள்ளார். கடையில் இருந்த 10 வயது சிறுவன் ஜஸ்பிரீத்திடம் உனது தந்தை எங்கே என்று கேட்க... அதற்கு ஜஸ்பிரீத் எனது தந்தை சமீபத்தில் உடல் நலப்பாதிப்பால் உயிரிழந்து விட்டார். அதன் பிறகு எனது தாயார் என்னையும், எனது சகோதரியையும் தவிக்க விட்டு விட்டு சென்று விட்டார். இதனால் நானும், எனது சகோதரியும் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். பின்னர் வாழ்வாதாரம் கருதி எனது தந்தையின் கடையை நானே நடத்த தொடங்கி விட்டேன். என் தந்தையிடம் இருந்து எக்ரோல் மற்றும் சிக்கன் ரொட்டி வகைகளை செய்ய பழகி இருந்தேன். தற்போது பல்வேறு வகையான ரொட்டி வகைகளை விற்பனை செய்கிறேன். வருபவர்கள் எல்லோருமே நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர் என கூறுகிறார்.

அவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 96 லட்சம் விருப்பங்களை குவித்தது. வீடியோவை பார்த்த பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா சிறுவனுக்கு உதவ முன் வந்தார். இது தொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தைரியம், உன் பெயர் ஜஸ்பிரீத். ஆனால் அவரது கல்வி பாதிக்கப்பட கூடாது. யாரேனும் அவரது தொடர்பு எண்ணில் இருந்தால் பகிரவும். ஜஸ்பிரீத்தின் கல்விக்கு ஆதரவு அளிப்பதற்கான வாய்ப்புகளை எனது அறக்கட்டளை செய்யும் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News