செய்திகள்

‘பாரடைஸ்’ ஆவணங்கள் மூலம் அம்பலம் - பட்டியலில் பாக். முன்னாள் பிரதமர் பெயர்

Published On 2017-11-07 00:07 GMT   |   Update On 2017-11-07 00:07 GMT
‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ ஆவணங்களின் பட்டியலில் 2004-2007 ஆண்டுகளில் பாகிஸ்தானில் பிரதமராக இருந்த சவுக்கத் அஜிஸ் (வயது 68) பெயர் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இஸ்லாமாபாத்:

வெளிநாடுகளில் உள்ள வரிச்சலுகையை பயன்படுத்தி பிரபலங்கள் பலரும், வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு, 95 ஊடக பங்குதாரர்கள் ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ என்ற பெயரில் ஆவணங்களை வெளியிட்டுள்ளனர். இதில் உலக தலைவர்கள், தொழில் அதிபர்கள், கம்பெனிகள் என 31 ஆயிரம் பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் 2004-2007 ஆண்டுகளில் பாகிஸ்தானில் பிரதமராக இருந்த சவுக்கத் அஜிஸ் (வயது 68) பெயர் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இவர், தனது மனைவி, குழந்தைகள், பேரக்குழந்தை ஆகியோரின் பெயரில் அமெரிக்காவில் டெலாவரே மாகாணத்தில் உருவாக்கியுள்ள அண்டார்க்டிக் அறக்கட்டளை நிறுவி, அதன் வாயிலாக முதலீடுகள் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் தனியார் எஸ்டேட்டும் இந்த ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ ஆவணங்களில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தனியார் எஸ்டேட் சார்பில் பல லட்சம் பவுண்டுகள், வெளிநாடுகளில் உள்ள வரிச்சலுகையை பயன்படுத்தி முதலீடு செய்யப்பட்டுள்ளனவாம். 
Tags:    

Similar News