செய்திகள்

ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கும் டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

Published On 2017-10-30 21:05 GMT   |   Update On 2017-10-30 21:05 GMT
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதிமறுக்கும் டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பலரும் ஆதரித்தனர். ஆனால், அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேருவது வரும் ஜனவரி 1ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.



இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்க ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் பணி புரியும் சுமார் 13 லட்சம் திருநங்கைகள் பாதிக்கப்பட்டனர். இதற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.



டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் டிரம்ப்பின் இந்த உத்தரவிற்கு தடை விதித்து புதிய உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பையடுத்து அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது.
Tags:    

Similar News