செய்திகள்

செக்குடியரசு பாராளுமன்ற தேர்தல்: பிரதமராகும் கோடீசுவரர் பேபிஸ்

Published On 2017-10-22 07:04 GMT   |   Update On 2017-10-22 07:04 GMT
ஐரோப்பா கண்டத்தில் உள்ள செக் நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் கோடீசுவரர் ஆண்ட்ரெஜ் பேபிஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளார்.
பராக்:

ஐரோப்பா கண்டத்தில் உள்ள செக்குடியரசு நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. 200 இடங்களுக்கு நடந்த மோதலில் ஏஎன்ஓ (யெஸ்) கட்சியும், சிவிக் டெமாக்ரடிக் மற்றும் தி செக் பைரேட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

வாக்கு பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடை பெற்றது. அதை தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏஎன்ஓ (யெஸ்) கட்சி அமோக வெற்றி பெற்றது. இக்கட்சியின் தலைவராக ஆண்ட்ரெஜ் பேபிஸ் (63). கோடீசுவரரான இவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.



இக்கட்சிக்கு 30 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. அதற்கு அடுத்தப்படியாக சிவிக் டெமாக்ரடிக் கட்சி 2-வது இடத்தையும், தி செக் பைரேட் கட்சி 3-வது இடத்தையும் பிடித்தன.

தேர்தலில் ஏஎன்ஓ (யெஸ்) கட்சி ஆட்சி அமைக்க தேவையான 78 இடங்களை பெற்றுள்ளது. எனவே இக்கட்சி ஆட்சி அமைக்கிறது கோடீசுவரர் ஆண்ட்ரெஜ் பேபிஸ் பிரதமராகிறார்.
Tags:    

Similar News