செய்திகள்

பயங்கரவாத குற்றச்சாட்டில் சவுதி அரேபியாவாசிக்கு 13 ஆண்டு சிறை - அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு

Published On 2017-10-14 23:38 GMT   |   Update On 2017-10-14 23:38 GMT
பயங்கரவாத குற்றச்சாட்டில் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்க்கு 13 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் 2002-ம் ஆண்டு, ஜார்ஜ் புஷ் ஜனாதிபதியாக இருந்தபோது, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்க்கைதிகளை அடைத்து வைப்பதற்காக கியூபா நாட்டில் குவாண்டனாமோவில் அமைக்கப்பட்ட சிறை உள்ளது.

இந்த சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர், அகமது முகமது அகமது ஹாசா அல் தார்பி. இவர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ஆவார். ஏமன் நாட்டு கடற்கரைப்பகுதியில், பிரெஞ்சு எண்ணெய் டேங்கர் மீது தாக்குதல் நடத்தியதாக அகமது முகமது மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி நடந்து கொண்டார். இந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய அமெரிக்க கோர்ட்டு அவருக்கு 13 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

இந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News