செய்திகள்

ஆஸ்திரேலியா: ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு அங்கீகாரம் - ஒரு கோடி மக்கள் வாக்களித்தனர்

Published On 2017-10-10 10:35 GMT   |   Update On 2017-10-10 10:56 GMT
ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அனுமதி அளிப்பதற்கு வகைசெய்யும் பொது வாக்கெடுப்பில் அந்நாட்டில் உள்ள 62.5 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்தனர்.
மெல்போர்ன்:

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் இவ்வகையான திருமணங்கள் செல்லும் வகையிலான சட்டங்கள் உள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு பல நாடுகள் சட்ட பாதுகாப்பு வழங்கினாலும், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இவ்வகை திருமணத்தை அனுமதிக்கவில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கான தபால் வாக்கெடுப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த தேர்தலில் 62.5 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புள்ளியல் துறை தெரிவித்துள்ளது. நவம்பர் 15-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அதிகளவு வாக்குகள் பதிவாகி இருக்கும் பட்சத்தில் இவ்வகை திருமணத்தை அங்கீகரிக்கும் 25 நாடாக ஆஸ்திரேலியா உருவெடுக்கும்.

கடந்த 2015-ம் ஆண்டு அயர்லாந்தில் நடைபெற்ற இதே போன்ற வாக்கெடுப்பில் 60.5 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால், தற்போது ஆஸ்திரேலியாவில் இதை விட அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News