செய்திகள்

19-வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் கூகுள்: ஸ்பின்னர் விளையாட்டு டூடுலுடன் கலக்கல்

Published On 2017-09-27 07:03 GMT   |   Update On 2017-09-27 07:03 GMT
தேடுபொறிகளில் (சர்ச் என்ஜின்) ஜாம்பவனாக திகழும் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் பல விளையாட்டுகளுடன் கூடிய ஸ்பின்னர் டூடுலுடன் 19-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறது.
நியூயார்க்:

உலகில் உள்ள தகவல்களை எல்லாம் ஒருமுகப்படுத்தி ஆன்லைன் கலைக்களஞ்சியமாக்கி, அந்த தகவலை உலகின் கடைக்கோடி மூலையில் உள்ள குக்கிராமத்தில் வாழ்பவர்களும் அறிந்துகொள்ளும் முயற்சியில் லார்ரி பேஜ் மற்றும் செர்கே பின் ஆகியோரால் கடந்த 27-9-1997 அன்று உருவாக்கப்பட்ட கூகுள் நிறுவனம் இன்று உலகளாவிய அளவில் 123 மொழிகளை பேசும் 160 நாடுகளில் சுமார் 4.5 பில்லியன் மக்களின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரிய தேடுபொறி சேவையை அளித்து வருகிறது.

அவ்வகையில், தேடுபொறிகளில் (சர்ச் என்ஜின்) ஜாம்பவனாக திகழும் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் பல விளையாட்டுகளுடன் கூடிய ஸ்பின்னர் டூடுலுடன் 19-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறது.


இன்றைய தினம் கூகுளின் முகப்பு பக்கத்துக்கு சென்றால் ஒரு சுழலும் சக்கரத்தை காணலாம். அந்த சக்கரம் 19 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இசை, கிரிக்கெட் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் ஆடி மகிழலாம்.
Tags:    

Similar News