செய்திகள்

டிரம்பின் மிரட்டல் நாய் குரைப்பதை போல் இருக்கிறது - வடகொரிய வெளியுறவுத்துறை மந்திரி விமர்சனம்

Published On 2017-09-21 14:30 GMT   |   Update On 2017-09-21 14:55 GMT
வடகொரியாவை அழிக்க நேரிடும் என டிரம்ப் மிரட்டியது நாய் குரைப்பதை போல இருக்கிறது என வடகொரிய வெளியுறவுத்துறை மந்திரி ரி யோங் ஹோ விமர்சனம் செய்துள்ளார்.

நியூயார்க்:

வடகொரியா தொடர் அணுஆயுத சோதனை நடத்திவருவதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன்காரணமாக அந்நாட்டின் மீது  அமெரிக்கா தொடர்ந்து பல வழியில் மிரட்டல் விடுத்து வருகிறது. ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்ளாத வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்திவருகிறது.

இந்நிலையில், ஐ.நா. பொதுசபையில் கடந்த 19-ம் தேதி முதல்முறையாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அணுஆயுத சோதனைகளை நிறுத்தாவிட்டால் அந்நாட்டை முழுமையாக அளிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை ராக்கெட் மனிதர் என குறிப்பிட்டார்.

டிரம்பின் இந்த எச்சரிக்கைகள் குறித்து பேசிய வடகொரிய வெளியுறவுத்துறை மந்திரி ரி யோங் ஹோ, 'நாய் குரைப்பதை போல் எங்களை சத்தமிட்டு மிரட்டலாம் என அவர் நினைப்பது நாயின் கனவு போன்றது', என  கூறியுள்ளார். நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பதிலளிக்கும் போது இவ்வாறு அவர் கூறினார். வருகிற வெள்ளிக்கிழமை ஐ.நா. பொது சபையில் ரி யோங் ஹோ கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்.
Tags:    

Similar News