செய்திகள்

அமெரிக்கா: இர்மா புயலின் போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது

Published On 2017-09-13 00:35 GMT   |   Update On 2017-09-13 00:35 GMT
அமெரிக்காவின் மியாமி நகரை இர்மா புயல் தாக்கியபோது அங்குள்ள கடைகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வாஷிங்டன்:

அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் கரீபியன் தீவுகளை துவம்சம் செய்த பின்னர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை தாக்கியது. ஏற்கனவே அமெரிக்காவின் கீழ் பகுதியில் உள்ள கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளை தாக்கி துவம்சம் செய்து 25 உயிர்களை பறித்த இர்மா புயல் அதன்பின்னர் புளோரிடாவுக்குள் நுழைந்துள்ளதால் அங்கு பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்தது.

புளோரிடாவின் கடலோர நகரான மியாமியை இந்த புயல் தாக்கிய போது அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதை பயன்படுத்திக்கொண்டு அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் சில மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனர். இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோரை மியாமி போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 26 பேர் கடந்த சனிக்கிழமை ஒரே கடையில் கொள்ளையடித்துள்ளனர் என மியாமி நகர போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
Tags:    

Similar News