செய்திகள்

அமெரிக்கா மிரட்டல்: போப் ஆண்டவர் உதவியை கேட்கும் வெனிசுலா அதிபர்

Published On 2017-08-24 07:14 GMT   |   Update On 2017-08-24 07:14 GMT
அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி நிக்கோலஸ் மதுரா ஆட்சியை அகற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெனிசுலா அதிபர் போப் ஆண்டவர் உதவியை நாடி உள்ளார்.
கராகஸ்:

தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள வெனிசுலாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நாட்டில் நீண்டகாலமாக அதிபராக இருந்த ஜாவஸ், அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளரான நிக்கோலஸ் மதுரா அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் நிக்கோலஸ் மதுரா ஆட்சியில் பொருளாதார நிலை சீர்குலைந்துள்ளது. அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் வெனிசுலாவில் உள்நாட்டு கலகம் ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி நிக்கோலஸ் மதுரா ஆட்சியை அகற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிக்கோலஸ் மதுரா போப் ஆண்டவர் உதவியை நாடி உள்ளார்.

அமெரிக்க ராணுவத்தின் அச்சுறுத்தலாலும் சர்வதேச அளவில் சில அழுத்தங்களாலும் வெனிசுலாவில் அமைதியற்ற நிலை நிலவுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ராணுவத்தை இங்கே ஊடுருவ செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

அமெரிக்காவிடம் இருந்து எங்களுடைய மக்களை காப்பாற்ற வேண்டும். இதற்கு போப் ஆண்டவர் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News