செய்திகள்

பொதுமக்களை தாக்கும் வீடியோ வைரலானது: சவுதி இளவரசர் கைது

Published On 2017-07-21 12:35 GMT   |   Update On 2017-07-21 12:35 GMT
சவுதி அரேபியா இளவரசர் சவுத் அப்துல் அஜிஸ் பொதுமக்களை தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாய்:

சவுதி அரேபியாவில் பொதுமக்களில் சிலரை இளவரசர் அப்துல் அஜிஸ் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், இளவரசரால் தாக்கப்பட்ட நபர்கள் படுகாயமடைந்து ரத்தம் சொட்ட செல்வது தெரிகிறது. அதுமட்டுமின்றி துப்பாக்கியை காட்டி மிரட்டுவது போன்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிய நிலையில், இதுபற்றி விசாரணை நடத்தும்படி மன்னர் சல்மான் உத்தரவிட்டார்.

இதையடுத்து இளவரசர் சவுத் அப்துல் அஜிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இளவரசருடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணை முடிந்து கோர்ட் உத்தரவு வரும் வரை, குற்றம்சாட்டப்பட்ட யாரையும் விடுதலை செய்யக்கூடாது என மன்னர் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனிடையே தாக்குதல்கள் நடைபெற்றதாக காட்டப்படும் வீடியோ காட்சிகளில் உண்மைத்தன்மை பற்றிய சந்தேகங்களும் எழுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News