செய்திகள்

சீன ஆக்கிரமிப்பு கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்

Published On 2017-07-02 20:19 GMT   |   Update On 2017-07-02 20:19 GMT
தென்சீன கடற்பகுதியில் அமைந்துள்ள சீன ஆக்கிரமிப்பு தீவை நெருங்கியபடி அமெரிக்க போர்க்கப்பல் பயணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்:

தென்சீன கடற்பகுதியில் உள்ள தீவு கூட்டங்களுக்கு பல்வேறு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இந்நிலையில், பராசெல் தீவு கூட்டங்களில் ஒன்றான சிறிய பரப்பளவு கொண்ட டிரைடன் தீவை சீனா ஆக்கிரமித்துள்ளது.  இந்த தீவு தங்களுக்கு சொந்தமென தைவான் மற்றும் வியட்நாம் நாடுகளும் கூறி வருகின்றன.

தென்சீன கடல் பகுதி முக்கிய வர்த்தக மையமாக உள்ள நிலையில் அங்கு சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒன்று டிரைடன் தீவை நெருங்கும் வகையில் தீவில் இருந்து 12 மைல்கள் (22 கிலோ மீட்டர்) தொலைவில் பயணம் செய்தது.

கடல்வழி பகுதிகளில் சுதந்திரமுடன் அனைத்து கப்பல்களும் சென்று வருவதனை எடுத்து காட்டும் வகையில் இந்நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News