செய்திகள்

இந்தியாவில் முதலீடு செய்ய தொழில்நுட்ப தலைமை செயல் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Published On 2017-06-25 19:39 GMT   |   Update On 2017-06-25 19:39 GMT
இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
வாஷிங்டன்:

போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை அமெரிக்காவின் வாஷிங்டன் விமான நிலையத்தில் தரையிறங்கனார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை முதன் முறையாக வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி சந்திக்க இருக்கிறார்.

இதற்கு முன்னதாக அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இச்சந்திப்பில் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து விவாதித்ததாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.   

இந்தியாவில் அடுத்த மாதம் முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படவுள்ளதைத் தொடர்ந்து இந்தியாவில் வியாபாரம் செய்வது மிகவும் எளிமையான ஒன்றாகியுள்ளது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் உள்ள பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
 


அமெரிக்காவில் உள்ள டாப் 20 தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசிய நரேந்திர மோடி, மத்திய அரசு திட்டங்களால் மூன்று ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீடு அதகரித்துள்ளது என தெரிவித்தார். சந்திப்பு குறித்து பிரதமர் பதிவிட்ட ட்வீட்டில் இந்தியாவில் உள்ள வியாபார சலுகைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினோம் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த சந்திப்பில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், அமேசானின் ஜெஃப் பெசோஸ், சிஸ்கோ நிறுவனத்தின் ஜான் சேம்பர்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தியாவின்
வளர்ச்சி இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு நல்ல பலனளிக்கும் ஒன்றாக இருக்கும். இதற்கு இந்தியா மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News