செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் இளவரசர் பிலிப் வீடு திரும்பினார்

Published On 2017-06-23 00:33 GMT   |   Update On 2017-06-23 00:33 GMT
நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் அரசியின் கணவர் இளவரசர் பிலிப் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
லண்டன்:

நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் அரசியின் கணவர் இளவரசர் பிலிப் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

பிரிட்டன் அரசி எலிசபத்தின் கணவரும் எடின்பரோ கோமகன் என்றழைக்கப்படும் அந்நாட்டின் இளவரசருமான பிலிப்(96) இரு நாட்களுக்கு முன்னர் நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையிலிருந்து வியாழக்கிழமை வீடு திரும்பினார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சிறுநீர்ப்பையில் ஏற்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்ட இளவரசர் பிலிப் கடந்த 2012 முதல் அதற்காக இரண்டு முறை சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். மேலும், 2011-ம் ஆண்டு இருதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

இளவரசர் பிலிப், இந்த ஆண்டு கோடை காலத்துக்கு பிறகு அரச பணிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என பக்கிங்ஹாம் அரண்மனை கடந்த மே மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News