செய்திகள்

அமெரிக்கா: மிச்சிகன் சர்வதேச விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து

Published On 2017-06-21 23:28 GMT   |   Update On 2017-06-21 23:28 GMT
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசை மர்மநபர் கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசை மர்மநபர் கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ப்ளிண்ட் என்ற பகுதியில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இந்த விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவரின் கழுத்து மற்றும் முதுகுப்பகுதியில் திடீரென மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தி பயங்கரமாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்த மற்ற போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபரை சுற்றி வளைத்து கைது செய்து அழைத்துச் சென்றனர். படுகாயமடைந்த போலீஸ் அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபரிடம் எப்.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், இதனால், விமான நிலையத்தில் வேறு எந்த பிரட்சனையும் ஏற்படவில்லை எனவும் நகர போலீசார் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News