செய்திகள்

சோமாலியா: அரசு அலுவலகம் மீது தீவிரவாதிகள் ஆவேச தாக்குதல் - 10 பேர்

Published On 2017-06-20 13:26 GMT   |   Update On 2017-06-20 13:26 GMT
சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷு நகரில் உள்ள அரசு அலுவலகம் மீது அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் பத்து பேர் உடல் சிதறி, பரிதாபமாக உயிரிழந்தனர்.
மொகடிஷு:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்று வரும் ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அல் ஷபாப் தீவிரவாதிகள், இங்கு பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும்  கென்யா, ஜிபோட்டி, உகாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த ஆப்பிரிக்க யூனியனை சேர்ந்த கூட்டுப்படையினரை குறிவைத்தும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும், வெளிநாட்டினர் அதிகமாக கூடும் பிரபல ஓட்டல்களின் மீது தாக்குதல் நடத்தி, பலரை சுட்டுக் கொன்றும், சிலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷு நகரில் உள்ள அரசு அலுவலகம் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் அதிகாரிகள் உள்பட பத்து பேர் உடல் சிதறி, பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் வடாஜிர் மாவட்ட நிர்வாக அலுவலகம் முற்றிலுமாக சேதம் அடைந்ததாகவும், படுகாயமடைந்த சுமார் 20 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Tags:    

Similar News