செய்திகள்

டிரம்பை ஒருபோதும் காதலிக்கவில்லை: பிரான்ஸ் முன்னாள் அதிபர் மனைவி மறுப்பு

Published On 2017-06-20 06:29 GMT   |   Update On 2017-06-20 06:29 GMT
‘டிரம்பை ஒருபோதும் நான் காதலிக்கவில்லை’ என பிரான்ஸ் முன்னாள் அதிபர் மனைவியும், மாடல் அழகியுமான கர்லா புரூனி மறுப்பு தெரிவித்துள்ளார்.
லாஸ்ஏஞ்சல்ஸ்:

பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசியின் மனைவி கர்லா புரூனி (49). இவர் முன்னாள் மாடல் அழகி. பிரபல பாடகியாகவும் திகழ்ந்தார்.

இந்த நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் இவர் காதல் வயப்பட்டிருப்பதாகவும், அவரது 2-வது மனைவி மார்லா மாப்பில்ஸ் விவாகரத்துக்கு இவர் காரணமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது இது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதை அப்போது டிரம்ப் மறுத்தார். பின்னர் பேட்டி அளித்த டிரம்ப் அது உண்மை என கூறி இருந்தார்.

அதற்கு தற்போது கர்லா புரூனி மறுப்பு தெரிவித்துள்ளார். அவரை காதலித்ததாக டிரம்ப் அது குறித்து எவ்வாறு கூறினார் என எனக்கு தெரியவில்லை. “டிரம்பை நான் ஒரு போதும் காதலித்தது இல்லை” என கூறியுள்ளார்.


கடந்த 2008-ம் ஆண்டு பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசியை கர்லாபுரூனி திருமணம் செய்தார். அவர்களுக்கு 5 வயதில் குயிலியா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

முதல் கணவர் பெயர் ரபேல் என்தோவன். இவர் பிரேஞ்ச் தத்துவஞானி ஆவார். இவருக்கு பிறந்த அயுரேலியன் என்ற 15 வயது மகன் இருக்கிறான். இவர் மாடலிங் செய்த போது நிர்வாணமாக ‘போஸ்’ கொடுத்து இருந்தார். இவர் சர்கோசியை திருமணம் செய்த போது அந்த போட்டோ பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News