செய்திகள்

அமெரிக்காவில் இனவெறியை தட்டிக்கேட்ட 2 பேர் குத்திக்கொலை

Published On 2017-05-28 06:46 GMT   |   Update On 2017-05-28 06:46 GMT
அமெரிக்காவில் இனவெறியை தட்டிக்கேட்ட 2 பேர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் போர்ட் லேண்ட்டில் பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் முஸ்லிம் பெண்கள் 2 பேர் பயணம் செய்தனர். ஜெர்மி ஜோசப் கிறிஸ்டியன் (35) என்ற வாலிபருடன் ரெயிலில் இருந்தார். அவர் முஸ்லிம் பெண்களிடம் இனவெறியை தூண்டும் வகையில் பேசி வம்பு செய்தார்.

அதை ரெயிலில் பயணம் செய்த 3 பேர் தட்டிக் கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மி ஜோசப் கிறிஸ்டியன் தான் வைத்திருந்த கத்தியால் அவர்கள் 3 பேரையும் சரமாரியாக குத்தினார்.

அதில் 2 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். ஒருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். உடனே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.



இச்சம்பவத்தால் ஓடும் ரெயிலில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் கொலையாளி ஜெர்மி ஜோசப் கிறிஸ்டியனை கைது செய்தனர்.

இது குறித்து அமெரிக்க இஸ்லாமிய சமூக கவுன்சில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2015 முதல் 2016-ம் ஆண்டு வரை அதாவது ஐ.எஸ். தீவிரவாதிகள் குறித்து டொனால்டு டிரம்ப் தீவிரமாக பிரசாரம் செய்ய தொடங்கினார்.

அன்று முதல் அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான விரோத போக்கு 50 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News