செய்திகள்

கனமழை: சர்வதேச உதவியை நாடியது இலங்கை

Published On 2017-05-27 20:13 GMT   |   Update On 2017-05-27 20:28 GMT
இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 120-ஐ எட்டி உள்ளது. மேலும் 150 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.
கொழும்பு:

இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 122 என கணக்கிடப்பட்டுள்ளது, மேலும் பலர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது. 

அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் மற்றும் பேரிடர் மீட்பு குழு சார்பில் ஐ,நா. மற்றும் நெருங்கிய நாடுகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது. குறிப்பாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் மீட்பு பொருட்களுடன் மூன்று கடற்படை கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய கடற்படையின் முதல் கப்பல் நேற்று கொழும்பு சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது. மீட்பு பணிகளில் அந்நாட்டு ராணுவ மற்றும் மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பு மற்றும் நிலச் சரிவுகளில் சிக்கி இதுவரை சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு சுகாதரத்துறை மந்திரி ரஜிதா சென்னார்த்தே தெரிவித்துள்ளார்.

மேலும் 185 நிவாரன முகாம்களில் இதுவரை 493,455 பேர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான நிவாரன உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News