செய்திகள்

கூகுள் நிறுவன பெண் அதிகாரி கற்பழித்து, எரித்து கொலை

Published On 2016-08-09 06:05 GMT   |   Update On 2016-08-09 06:05 GMT
கூகுள் நிறுவனத்தின் நிதித்துறை மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண் அமெரிக்காவின் காட்டுப்பகுதியில் கற்பழிக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் நிதித்துறை மேலாளராக பணியாற்றி வந்தவர் வனேசா மார்கோட்டி(27).

மாசாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பிரின்ஸ்டன் புறநகர் பகுதியில் வசித்து வந்த தனது தாயாரை சந்திக்க சென்ற வனேசா, அங்குள்ள காட்டுப்பகுதியில் ‘ஜாகிங்’ செய்யச் சென்றார். மாலை வெகு நேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை.

மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பார்த்தபோது, எவ்வித பதிலும் கிடைக்காத காரணத்தால் வனேசாவின் தாயார், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, போலீசார் மார்கோட்டினை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவளது வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் மரக்கட்டைகளுக்கு இடையில் கற்பழித்து, எரிக்கப்பட்ட நிலையில் ஒரு பிரேதம் கிடந்துள்ளது.

விசாரணையில் அது வனேசாவின் உடல் தான் என தெரியவந்துள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட மார்கோட் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் அவரது தலை, கால் ஆகிய பாகங்கள் மட்டும் எரிந்துள்ளன என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மார்கோட்டின் மரணம் குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வனேசா மார்கோட்டின் இறப்பால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அலுவகத்தில் தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து, அனைவரிடமும் அன்பாக பழகும் குணம் கொண்ட வனேசா மார்கோட்டின் இறப்பு எங்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News