தமிழ்நாடு

அமைச்சர் பொன்முடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார்

Published On 2023-07-18 08:49 GMT   |   Update On 2023-07-18 11:21 GMT
  • அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று இன்று அதிகாலை 3 மணி வரை விசாரணை மேற்கொண்டனர்.
  • அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் துணிச்சலுடனும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு பொன்முடிக்கு அறிவுரை கூறினார்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று பெங்களூரு சென்றிருந்தார். இன்றும் அங்குதான் உள்ளார்.

இந்த நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு அவரது மகன் டாக்டர் கவுதமசிகாமணி எம்.பி. வீடு உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து சோதனை நடத்தினார்கள்.

அமைச்சர் பொன்முடியை  அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று இன்று அதிகாலை 3 மணி வரை விசாரணை மேற்கொண்டனர். இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வழங்கி உள்ளனர்.

இந்த நிலையில் இன்று அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். சோதனை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் துணிச்சலுடனும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு பொன்முடிக்கு அறிவுரை கூறினார்.

ஒன்றிய பா.ஜ.க. அரசின், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரிதீயாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் கழகம் என்றும் துணை நிற்கும்.

இவ்வாறு பொன்முடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags:    

Similar News