செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Published On 2021-09-14 08:33 GMT   |   Update On 2021-09-14 08:33 GMT
மாணவர்கள் எந்த ஒரு சூழலையும் எதிர்த்து போராடுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வு நடைபெற்ற இரு நாட்கள் இடைவெளியில் 2-வது மாணவரை பலி கொண்டுள்ளது. தமிழ்நாட்டு கல்விச் சூழலுக்கு சற்றும் பொருத்தமில்லாத, தேவையில்லா நீட் தேர்வு மாணவர்களை எவ்வாறு பலி வாங்கி வருகிறது என்பதை சொல்லி விளக்கத் தேவையில்லை.

மாணவர்களின் உயர்வுக்கு வழி வகுக்க வேண்டிய கல்வி, மாணவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில், மாணவர்கள் எந்த ஒரு சூழலையும் எதிர்த்து போராடுவதற்கு தயாராக இருக்க வேண்டும். நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளக்கூடாது.

இனியும் நீட் தேர்வால் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும். அதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

உயிரிழந்த மாணவி கனிமொழியின் தற்கொலை வேதனையளிக்கிறது. மாணவியின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News