செய்திகள்
அபராதம்

திருவொற்றியூரில் கொரோனா விதிகளை மீறிய திருமண மண்டபங்களுக்கு அபராதம்

Published On 2021-04-27 02:04 GMT   |   Update On 2021-04-27 02:04 GMT
கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 10 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் டீ கடைகள், பேன்சி ஸ்டோர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
திருவொற்றியூர்:

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் செயற்பொறியாளர் பால் தங்கதுரை, வருவாய்த்துறை அதிகாரி முருகபாலாஜி ஆகியோர் தலைமையில் திருமண மண்டபங்கள் மற்றும் டீ கடைகளில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.

அப்போது கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 10 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் டீ கடைகள், பேன்சி ஸ்டோர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

அதேபோல் சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் திரு.வி.க. நகர் மண்டல வருவாய்த்துறை அலுவலர்கள் கொரோனா ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த தனியார் மண்டபத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட கூடுதலாக 150 பேர் பங்கேற்று இருப்பது தெரியவந்தது. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றிய மண்டல அதிகாரிகள், மண்டபத்துக்குள் சாப்பிட தயாராக இருந்த உறவினர்களையும் வெளியேற்றிவிட்டு மண்டபத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.
Tags:    

Similar News