செய்திகள்
ராமதாஸ்

மாணவர்களிடம் கல்லூரிகள் வசூலித்த தேர்வுக்கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2020-08-03 09:09 GMT   |   Update On 2020-08-03 09:09 GMT
மாணவர்களிடம் கல்லூரிகள் வசூலித்த தேர்வுக்கட்டணத்தை திருப்பி வழங்க அரசு ஆணையிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளநிலை என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களிடமிருந்து ரூ.1,200 முதல் ரூ.1,750 வரை தேர்வு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதுநிலை என்ஜினீயரிங் மற்றும் கணினி பயன்பாடு படிப்புகளுக்கு ரூ.3,600 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நடப்பு பருவத்தேர்வுகளுக்காக வசூலிக்கப்பட்ட இந்ததொகை சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தேர்வு நடத்தப்படாத நிலையில், வசூலிக்கப்பட்ட தேர்வுக்கட்டணம் முழுவதையும் மாணவர்களிடம் வழங்கும்படி அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அரசு ஆணையிட வேண்டும். மதிப்பெண் சான்றிதழை பல்கலைக்கழகமே அச்சிட்டு வழங்க வேண்டும். தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்களும், அவற்றுடன் இணைக்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் ஒரு மாணவரிடமிருந்து குறைந்தபட்சம் ரூ.375 முதல் ரூ.1,000 வரை வசூலித்துள்ளன. சாதாரண கல்லூரிகளில் தொடங்கி, அண்ணா பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையினர் ஏழைக்குடும்பங்களை சேர்ந்தவர்கள்தான். தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், தேர்வுக்கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பிக்கொடுத்தால் அது கல்விசார்ந்த பிறசெலவுகளுக்கு பயன்படும். எனவே, அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் மாணவர்களிடம் இருந்து வசூலித்த தேர்வுக்கட்டணத்தை அவர்களிடமே திருப்பி வழங்க அரசு ஆணையிடவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News