செய்திகள்
கோவை டாடாபாத் மின்வாரியம் அலுவலகம் முன்பு மறியல் செய்த மின் ஊழியர்கள்.

பணி நிரந்தரம் செய்யக்கோரி கோவையில் மறியல் செய்த மின் ஊழியர்கள் 200 பேர் கைது

Published On 2019-11-05 07:31 GMT   |   Update On 2019-11-05 07:31 GMT
பணி நிரந்தரம் செய்யக்கோரி கோவையில் மறியல் செய்த மின் ஊழியர்கள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

தமிழகம் முழுவதும் 8,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பணி நிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கடந்த 1-ந் தேதி முதல் மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர். இந்நிலையில் இன்று கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் முன்பு மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மின் வாரியத்தில் 1998-ம் ஆண்டுக்கு முன்பு பணியில சேர்ந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்க வேண்டும். 2008-ம் ஆண்டுக்கு முன்பு ஒப்பந்த பணியில் சேர்ந்தவர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். 2008-ம் ஆண்டுக்கு பின்பு ஒப்பந்தபணியாளராக சேர்ந்தவர்களுக்கு போர்மென் பணி தேர்வுகள் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டம் காரணமாக மின்வாரிய அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Tags:    

Similar News