செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக நீடிக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம்- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2019-10-19 04:27 GMT   |   Update On 2019-10-19 04:27 GMT
ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக நீடிக்கவேண்டும் என்பதே தங்களது எண்ணம் என்று நாங்குநேரியில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தான். அவர்கள் கொண்டு வரவில்லையென்றால் தமிழகத்திற்கு நீட் தேர்வு வந்திருக்காது. முதலமைச்சரை கவுரவப்படுத்தும் விதமாக டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஜனநாயக பூங்காவாக திகழ்கிறது.

தேர்தல் என்று வந்தால் சாதனைகளுக்கும் கட்சியின் கொள்கைகளுக்கும் வாக்கு அளித்த நிலையை மாற்றி திருமங்கலம் பார்முலாவை அமல்படுத்தியதே தி.மு.க. தான். நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வெற்றி பெறும். என்னுடைய அறையை கூட சோதனை நடத்தலாம், எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயம் இல்லை.

முதலமைச்சர் ராஜினாமா செய்வாரா? என்று ஸ்டாலின் கேட்கிறார். ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக நீடிக்கவேண்டும் என்பதே எங்களது எண்ணம். அது கூட போகவேண்டுமா? என அவரிடம் கேட்டு கொள்ளுங்கள். ஸ்டாலின் ஜமீன்தார் தோரணையில் அமர்ந்து படம் பார்த்தார். அந்த படத்தில் வரும் வில்லன் கேரக்டர் மு.க. ஸ்டாலினுக்கு பொருந்தும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு தீர்மானம் போட்டு அனுப்பி உள்ளோம். கவர்னரை கட்டாயப்படுத்த முடியாது. 7 பேர் கட்டாயம் விடுதலை பெறவேண்டும். அதற்காக அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News