செய்திகள்

மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக சென்ட்ரலில் மேலும் ஒரு புதிய சுரங்கப்பாதை திறப்பு

Published On 2019-06-18 04:14 GMT   |   Update On 2019-06-18 04:14 GMT
சென்ட்ரல், மெட்ரோ, புறநகர் ரெயில் பயணிகள் வசதிக்காக மேலும் ஒரு சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே பிரமாண்ட மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரெயில் சேவையில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பயணிகள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் சென்ட்ரலில் பயணிகள், பொதுமக்கள் எளிதாக மெட்ரோ ரெயில் நிலையம், எம்.ஜி.ஆர். சென்ட்ரல் நிலையம், புறநகர் ரெயில் நிலையம், பறக்கும் ரெயில் நிலையங்களுக்கு செல்லும் வகையில் மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டது.

அதன்படி சென்ட்ரலில்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூமிக்கடியில் மேலும் ஒரு பயணிகள் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது

கடந்த சனிக்கிழமை பயணிகள் சேவைக்காக இந்த புதிய சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. இதன்மூலம் பயணிகள், பொதுமக்கள் எளிதில் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் நிலையம், புறநகர் ரெயில் நிலையம், பூங்கா ரெயில் நிலையம், பறக்கும் ரெயில் நிலையங்களுக்கு செல்ல முடியும். இதனால் பயணிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News