என் மலர்
நீங்கள் தேடியது "Metro Train"
- சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் நையாண்டி மேளம் போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
- கிராமியக் கலை நிகழ்ச்சிகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதிர்வேதி தொடங்கி வைக்கிறார்.
சென்னை:
இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடிடும் வகையில் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் நையாண்டி மேளம் போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதிர்வேதி தொடங்கி வைக்கிறார்.
நாளை (12-ந்தேதி) புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திலும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) அன்று விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்திலும், 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்திலும், 15-ந்தேதி (திங்கட்கிழமை) சுதந்திர தினத்தன்று அசோக் நகர் மெட்ரோ ரெயில் நிலையத்திலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
- அதிகபட்சமாக 27-ந் தேதி அன்று 1,97,307 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
- ஜூன் மாதத்தை காட்டிலும் ஜூலை மாதத்தில் 27,269 பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.
1.1.22 முதல் 30.04. 2022 வரை மொத்தம் 1,47,19,991 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
1.5.22 முதல் 31.05. 2022 வரை மொத்தம் 47,87,846 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
1.6.22 முதல் 30.06. 2022 வரை மொத்தம் 52,90,390 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
1.7.22 முதல் 31.07.22 வரை மொத்தம் 53,17,659 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக 27-ந் தேதி அன்று 1,97,307 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், ஜூன் மாதத்தை காட்டிலும் ஜூலை மாதத்தில் 27,269 பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை மாதத்தில் மட்டும் க்யூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 16,11,440 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 32,81,792 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூ ஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டணத்தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சர்வதேச விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகள் இரவு 12 மணிக்கு பின்னர் அதிக அளவு உள்ளது.
- தற்போது மெட்ரோ ரெயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே உள்ளது.
ஆலந்தூர்:
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது சென்னை விமான நிலையம்- திருவொற்றியூர் விம்கோநகர், பரங்கிமலை-சென்ட்ரல் இடையே 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 3 வழித்தடங்களில் 118.9 கி.மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடந்து வருகின்றன.
கொரோனா நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை தொடந்து சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை, விமான சேவை பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் உள்நாட்டு விமான சேவை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன.
இதேபோல் சர்வதேச விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகள் இரவு 12 மணிக்கு பின்னர் அதிக அளவு உள்ளது.
ஆனால் தற்போது மெட்ரோ ரெயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே உள்ளது. எனவே சென்னை விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு பஸ்நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இரவு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமான பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து விமான பயணி ஒருவர் கூறியதாவது:-
இரவில் தாமதமாக விமானங்களில் வரும் பயணிகளுக்கு விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தால் எந்த பலனும் இல்லை. தற்போது உள்நாட்டு விமான சேவைகள் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இரவு 12 மணிக்குப் பிறகு அதிகமான சர்வதேச விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகள் உள்ளன.
துபாய், தோஹா, ஷார்ஜா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களில் இருந்து சென்னை வரும் பிற மாவட்ட பயணிகள் கோயம்பேடு, எழும்பூர்- சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்ல அதிகம் விரும்புவார்கள். இரவில் மெட்ரோ ரெயில் சேவை இல்லாததால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இரவு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறுஅவர் கூறினார்.
இது குறித்து விமான நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் பஸ்கள் விமான நிலையத்திற்குள் வந்தன. தனியார் ஆம்னி பஸ்களும் காத்திருக்கும். இது தற்போது இல்லை,"என்றார்.
இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, பராமரிப்பு பணி காரணமாக இரவு நேர மெட்ரோ ரெயில் சேவைகளை இயக்க முடியாது. மொத்தம் 52 மெட்ரோ ரெயில்கள் உள்ளன. தினமும் இரவு பராமரிப்பு பணி செய்ய எங்களுக்கு 4 மணிநேரம் மட்டுமே உள்ளது. ஏற்கனவே இந்த நேரம் போதுமானதாக இல்லை. உலகில் எங்கும் மெட்ரோ ரெயில்கள் இரவில் இயக்கப்படுவது இல்லை என்றார்.
- சென்னை மெட்ரோ ரெயில் 2-வது கட்ட திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே, 45.8 கி.மீ., மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
- முதல் கட்டமாக மாதவரம் - தரமணி இணைப்பு சாலை வரை பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளன.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் சுரங்க மெட்ரோ ரெயில் நிலைய பணிகள் ராட்சத எந்திரங்கள் மூலம் இரவு, பகல் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை-மணிக்கூண்டு இடையே சுரங்க மெட்ரோ ரெயில் நிலைய பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக அப்பகுதியில் சாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் 2-வது கட்ட திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே, 45.8 கி.மீ., மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
இப்பாதையில், முதல் கட்டமாக மாதவரம் - தரமணி இணைப்பு சாலை வரை பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளன.
சுரங்க ரெயில் நிலையங்கள் கட்டுவதற்கு பாதுகாப்பு சுற்றுச்சுவர்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரெயில் நிலையம் சுரங்கத்தில் கட்டப்பட உள்ளது. இதற்காக இடம் கையகப்படுத்தப்பட்டு, சுரங்க ரெயில் நிலையம் கட்டும் இடத்தில், தற்காலிக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மெட்ரோ ரெயில் நிலையம் கட்டுமான ஆரம்ப கட்ட பணிக்காக ராட்சத எந்திரங்கள், ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சுரங்க மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்க பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இதற்காக, ராயப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து மணிக்கூண்டு நோக்கி செல்லும் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .
ராயப்பேட்டை வெஸ்லி சர்ச் அருகே மணிக்கூண்டில் இருந்து ராயப்பேட்டை மருத்துவமனை நோக்கி செல்லும் சாலையில் தற்காலிக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளன.
இச்சாலையில் வாகனங்கள் இருவழியிலும் மெட்ரோ ரெயில் பணிக்கு இடையூறு இல்லாமல் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ராயப்பேட்டையில் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையம் கட்டுமான பணியையொட்டி அப்பகுதியில் பல ராட்சத கிரேன்கள் மற்றும் எந்திரங்கள் மூலம் இரவு, பகலாக தீவிரமாக பணிகள் நடந்து வருவதை சாலையில் செல்லும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழா மற்றும் தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை கலை குழுவினருடன் இணைந்து மெல்லிசை கலை நிகழ்ச்சியை பின்வரும் தேதிகளில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடத்துகிறது. அதன் விவரும் வருமாறு:-
வருகிற 23-ந் தேதி உயர் நீதிமன்றம் மெட்ரோ ரெயில் நிலையம்-மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 30-ந் தேதி மெட்ரோ ரெயில்-நீல வழித்தடம் (விமான நிலையம்-விம்கோ நகர் பணிமனை மெட்ரோ) ரெயில் நிலையம்-மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், ஆகஸ்டு 6-ந் தேதி கிண்டி மெட்ரோ ரெயில் நிலையம்-மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 13-ந் தேதி திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையம்-மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 20-ந் தேதி அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம்-மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 27-ந் தேதி மெட்ரோ ரெயில் பச்சை வழித்தடம் (விமான நிலையம்-புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ) ரெயில் நிலையம்-மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடக்கிறது.
சென்னை மாநகரில் வசிக்கும் மெட்ரோ ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடைபெறும் இசை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்குமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- பல்லாயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரெயில் திட்டத்தால் பயன் பெறுவார்கள்.
- பயணிகள் பயண நேரம் மிச்சமாகும் என்று மெட்ரோ ரெயில் அதிகாரி தெரிவித்தார்.
சென்னை:
சென்னை சென்ட்ரல்-கோயம்பேடு இடையே அண்ணாசாலை வழியாக நேரடி மெட்ரோ ரெயிலை இயக்குவது தொடர்பான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநகரின் முக்கிய பகுதியாக விளங்கும் அண்ணா சாலையில் ஏராளமான நிறுவனங்கள், அலுவலகங்கள், செயல்பட்டு வருகின்றன. இவர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகிறார்கள்.
இந்த புதிய திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுதாங்கல் போன்ற ரெயில் நிலையங்களில் இருந்து ஏறும் பயணிகள் கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நந்தனம் ஆகிய இடங்களுக்கு செல்பவர்கள் ஆலந்தூர் சென்று மாற வேண்டியது இல்லை. நேரடியாக அண்ணா சாலை ரெயிலில் சென்று விடலாம்.
கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து அண்ணா சாலை வழியாக கிண்டி, நந்தனம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களுக்கு செல்பவர்கள் இந்த திட்டம் அமலுக்கு வந்து நேரடி ரெயில் இயக்கப்பட்டால் பெரிதும் பயன் அடைவார்கள். பல்லாயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரெயில் திட்டத்தால் பயன் பெறுவார்கள். அவர்களின் பயண நேரமும் மிச்சமாகும் என்று மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் இந்த ஆய்வு பணிகள் சவாலாக இருப்பதாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
- மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரெயில் நிலையங்கள் இடம்பெறுகின்றன.
- சுரங்க பாதை தோண்டும் பணிக்காக 23 ராட்சத துளையிடும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதை தொடர்ந்து ரூ.63,246 கோடி மதிப்பில் 118. கிலோ மீட்டர் தொலைவுக்கு 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி நடைபெறுகிறது.
இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சிங்கேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உயர்மட்ட பாதை, சுரங்க பாதையில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில் உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரெயில் நிலையங்கள் இடம்பெறுகின்றன. சுரங்க பாதை தோண்டும் பணிக்காக 23 ராட்சத துளையிடும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த துளையிடும் எந்திரங்கள் சீனா, ஜப்பானில் இருந்து வரவழைக்கப்படுகின்றன.
இதே போல இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராட்சத எந்திரங்களும் சுரங்கப் பாதை தோண்ட பயன்படுத்தப்படுகிறது. சுரங்கப் பாதை துளையிடும் முதல் எந்திரம் சீனாவில் இருந்து கடந்த 3-ந்தேதி மாதவரம் பால் பண்ணை பகுதிக்கு வந்தது.
இதற்கிடையே சுரங்கப்பாதை தோண்டும் 2-வது எந்திரத்தின் பரிசோதனை வெற்றிகரமாக நடந்தது. பொன்னேரியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இதற்கான சோதனை நடந்தது. இந்த ராட்சத எந்திரம் 6.6 மீட்டர் விட்டம் கொண்டது.
இந்த 2-வது எந்திரம் கெல்லீஸ்-தரமணி இடையேயான சுரங்கப்பாதை தோண்ட பயன்படுத்தப்படுகிறது. இந்த பாதை 12 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. சுரங்கப்பாதை தோண்டும் பணி அக்டோபர் மாதம் தொடங்கும்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் 2025-26-க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சென்னை நந்தனத்தில் ரூ.365 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட 12 மாடி மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
- 6 மாடி கட்டிடத்தில் மெட்ரோ ரெயில் அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு கட்டிடம் வாடகைக்கு விடப்பட உள்ளது. தற்போது இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமையகம் தற்போது கோயம்பேட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லை.
எனவே சென்னை நந்தனம்-அண்ணா சாலையில் தேவர் சிலை அருகே பிரமாண்டமான வகையில் மெட்ரோ ரெயில் நிலைய தலைமை அலுவலகம் அமைக்க கடந்த பல ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது.
இந்த புதிய அலுவலகம் 3.90 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.365 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 'சி.எம்.ஆர்.எல். பவன்' என்ற பெயரில் இக்கட்டிடம், 12 மாடிகளுடன் ஒரு கட்டிடமும், தலா 6 மாடிகளுடன் 2 கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
6 மாடி கட்டிடத்தில் மெட்ரோ ரெயில் அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு கட்டிடம் வாடகைக்கு விடப்பட உள்ளது. தற்போது இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இன்னும் ஒரு சில மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட உள்ளது.
அதை தொடர்ந்து 12 மாடி பிரமாண்ட கட்டிடம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இந்த தகவலை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- 01.01.2022 முதல் 30.04.2022வரை மொத்தம் 1,47,19,991 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
- 01.05.2022 முதல் 31.05.2022 வரை மொத்தம் 47,87,846 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது மெட்ரோ ரெயில் சேவையை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன்29 முதல் சென்னையில் துவங்கியது. மெட்ரோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது. இதுவரை சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த ஏழு ஆண்டுகளில் அதாவது, 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 12கோடியே 28லட்சத்து 24ஆயிரத்து 577பயணிகள் பயணித்துள்ளார்கள்.
01.01.2022 முதல் 30.04.2022வரை மொத்தம் 1,47,19,991 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.05.2022 முதல் 31.05.2022 வரை மொத்தம் 47,87,846 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.06.2022 முதல் 30.06.2022 வரை மொத்தம் 52,90,390 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக 03.06.2022 அன்று 2,02,456 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் 5,02,544 பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2022, ஜூன் மாதத்தில் மட்டும் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 13,18,641 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 31,65,340 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு கியூஆர் குறியீடு பயணச்சீட்டில் 11.09.2020 முதல் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழக்கம் போல் வழங்கி வருகிறது. மெட்ரோ ரெயில் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 22.02.2021 முதல் 20சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் பயண அட்டையை விற்பனை செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட முகவர்களாக விருப்பம் உள்ளவர்கள் அருகிலுள்ள மெட்ரோ ரெயில் நிலைய கட்டுப்பாட்டு அலுவலரை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயிலில் டிக்கெட் கட்டணம் மின்சார ரெயிலை விட கூடுதல் என்பதால் பயணிகளிடம் ஆரம்பத்தில் வரவேற்பு குறைவாகவே இருந்தது.
- பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வருமானமும் அதிகரித்து வருகிறது.
சென்னை:
சென்னையில் விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரை 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு வழித்தடத்திலும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 21.96 கிலோ மீட்டர் தூரத்துக்கு மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
மெட்ரோ ரெயிலில் டிக்கெட் கட்டணம் மின்சார ரெயிலை விட கூடுதல் என்பதால் பயணிகளிடம் ஆரம்பத்தில் வரவேற்பு குறைவாகவே இருந்தது. குளிர்சாதன வசதியுடன் சொகுசான போக்குவரத்தாக இருப்பதால் பயணிகளிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 25.19 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். பிப்ரவரி மாதம் 31.86 லட்சமாக உயர்ந்தது. பின்னர் மார்ச் மாதம் 44.67 லட்சமாக உயர்ந்தது. கடந்த மே மாதம் இருமடங்காக அதிகரித்துள்ளது. அதாவது 47.9 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வருமானமும் அதிகரித்து வருகிறது.