செய்திகள்

கரூர் அமராவதி ஆற்றில் உள்ள அரசு மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-02-01 07:41 GMT   |   Update On 2019-02-01 07:41 GMT
கரூர் அமராவதி ஆற்றில் கோயம்பள்ளி, பஞ்சமாதேவி, புலியூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மணல் குவாரிகள் செயல்பட இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது. #MaduraiHC

மதுரை, பிப். 1-

கரூர் சாணப்பிரட்டி கிராமத்தைச் சேர்ந்த குண சேகரன் மதுரை ஐகோர்ட் டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தின் வழியக பாயும் அமராவதி ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டு காரணமாக ஏற்கனவே மணல் அளவு குறைந்துள்ளது. இந்த நிலையில், கோயம்பள்ளி, பஞ்சமாதேவி, புலியூர் ஆகிய கிராமங்களில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது.அரசு மணல் குவாரிக ளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

இந்தப்பகுதியில் அதி களவில் மணல் அள்ளப் படுவதால் தண்ணீர் இன்றி விவசாயம் நடை பெறாததுடன் குடிதண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

எனவே கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் அரசு நடத்தும் 3 மணல் குவாரிகள் செயல்பட இடைக்கால தடைவிதிக்க வேண்டும் “ என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அமராவதி ஆற்றில் கோயம்பள்ளி, பஞ்சமாதேவி, புலியூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மணல் குவாரிகள் செயல்பட இடைகால தடைவிதித்து உத்தரவிட்டனர்.

மேலும் இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலர், கரூர் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

Similar News