செய்திகள்

வடசென்னையில் ரூ.66 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி- 2 தொழில் அதிபர்கள் கைது

Published On 2019-01-23 10:13 GMT   |   Update On 2019-01-23 10:13 GMT
வட சென்னை பகுதியில் 2 தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள் போலியான ஆவணங்களை தயாரித்து ரூ.66 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைதானார்கள்.
சென்னை:

ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் அதனை கண்காணிப்பதற்காக தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாடு முழுவதும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வட சென்னை பகுதியில் 2 தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள் போலியான ஆவணங்களை தயாரித்து ரூ.66 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக வடசென்னை ஜி.எஸ்.டி. வரி கமி‌ஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக சீனிவாசலு, போஸ் ஆகிய 2 தொழில் அதிபர்கள் கைது செய்யப்பட்டனர். தங்களது நிறுவனத்துக்கு பொருட்கள் வாங்கியதாக போலியாக கணக்கு காட்டி இருவரும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்தே அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை முதல் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு தொடர்பாக 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.569 கோடி வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. #GST
Tags:    

Similar News