செய்திகள்

தமிழக அரசியலில் அ.தி.மு.க., தி.மு.க. இல்லாத கூட்டணி உருவாகாது - ஜி.கே.வாசன்

Published On 2019-01-12 10:17 GMT   |   Update On 2019-01-12 10:17 GMT
தமிழக அரசியலில் அ.தி.மு.க.-தி.மு.க. இல்லாத கூட்டணி உருவாகாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். #GKVasan

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:-

எங்களை பொறுத்தவரை மக்கள் மனநிலையையும், தொண்டர்களின் கருத்தையும் அறிந்து மக்கள் விரும்பும் கூட்டணியில் இடம் பெறுவோம்.

தமிழகத்தில் 50 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத கட்சி. அதே போல் பா.ஜனதாவும் இதுவரை ஆண்ட கட்சி இல்லை. மத்தியில் காங்கிரஸ் நீண்ட காலம் ஆட்சி செய்துள்ளது. பா.ஜனதா 2 முறை ஆட்சி செய்துள்ளது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

மக்களின் அடிப்படை பிரச்சினை என்பது வளர்ச்சி. பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை இந்த வளர்ச்சியை மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். எனவே மக்களின் கருத்துதான் இறுதி கருத்தாக இருக்கும்.

தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இல்லாத கூட்டணி என்பது இந்த நிமிடம் வரை அமைவதற்கான சாத்தியக் கூறு என்பது தொலை நோக்குப் பார்வையாகவே இருந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #GKVasan

Tags:    

Similar News