செய்திகள்

பா.ஜனதா அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர் - திருமாவளவன்

Published On 2018-12-14 09:15 GMT   |   Update On 2018-12-14 09:15 GMT
பா.ஜனதாவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பது 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் உறுதியாகி உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். #Thirumavalavan
நாகர்கோவில்:

நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியுற்றது. இது பா.ஜனதாவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பது உறுதியாகி உள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க முன்வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இப்படி செயல்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 5 ஆண்டுகளில் பா.ஜனதா கூறிய தேர்தல் வாக்குறுதியில் ஒன்றைகூட நிறைவேற்றவில்லை. ஜனநாயகத்திற்கு பாதுகாப்பு இல்லை. தேசத்திற்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்த மக்கள் பா.ஜனதாவை தோற்கடித்து உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அகில இந்திய அளவில் மதசார்பற்ற கொள்கையுடைய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மக்கள் பிரதிகள் இல்லாமல் எப்படி உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்பட முடியும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதை நியாயப்படுத்தும் வகையில் முதல்வர் பேசி உள்ளார்.

எச்.ராஜா ஜாதி ஆணவத்தால் பேசியதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அவரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

வருகிற ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடக்கிறது. இலங்கை பாராளுமன்றம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்தை காக்கும் வகையில் உள்ளது. தீர்ப்பை வரவேற்கிறேன்.

நீர்நிலைகளில் அமைக்கப்பட்டு உள்ள வீடுகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. முதலில் நீர் நிலைகளில் உள்ள கல்வி நிறுவனங்களை அகற்ற அரசு முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #Thirumavalavan

Tags:    

Similar News