செய்திகள்

மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி ரெயில் சேவை மாற்றம்

Published On 2018-04-26 02:51 GMT   |   Update On 2018-04-26 02:51 GMT
அத்திப்பட்டு-மீஞ்சூர் இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 26-ந் தேதி (இன்று) முதல் 30-ந் தேதி வரையிலான 5 நாட்கள் மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.#ElectricTrainsServices
சென்னை:

அத்திப்பட்டு-மீஞ்சூர் இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 26-ந் தேதி (இன்று) முதல் 30-ந் தேதி வரையிலான 5 நாட்கள் மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு கும்மிடிப்பூண்டி நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து நள்ளிரவு 2.45 மணிக்கு மூர்மார்க்கெட் நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயிலும் மேற்கண்ட 5 நாட்களில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. #ElectricTrainsServices
Tags:    

Similar News