search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் சேவை"

    • இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
    • டெல்லியில் ஜம்முதாவி-டெல்லி விரைவு ரெயில் உள்பட 22 ரெயில்கள் தாமதமாக வருகின்றன.

    புதுடெல்லி:

    வடஇந்தியாவில் குளிர்காலம் என்பதால் கடுங்குளிர் நிலவி வருகிறது. காலையில் மக்கள் எழுந்ததும் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். வாகனங்கள் சாலையில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் உள்ளதால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    டெல்லி ரெயில் நிலையத்திற்கு வரும் ஜம்முதாவி-டெல்லி விரைவு ரெயில் உள்பட 22 ரெயில்கள் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நெல்லை-திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாளம் பல்வேறு இடங்களில் ஜல்லி கற்கள் அரித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தது.
    • சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில் ரெயில்கள் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டது.

    இந்த மழை வெள்ளத்தால் நெல்லை-திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாளம் பல்வேறு இடங்களில் ஜல்லி கற்கள் அரித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தது.

    இதனால் செய்துங்க நல்லூர் ரெயில் நிலையம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடத்திலும், தாதன்குளம் பகுதியில் ஒரு இடத்திலும், ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் வரை யிலான ரெயில்வே தண்ட வாளம் பகுதியில் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே தண்டவாளம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது.

    ரெயில்வே அதிகாரிகள் செய்துங்கநல்லூர், தாதன் குளம் மற்றும் ஆழ்வார்திரு நகரி பகுதிகளில் இரவு பகலாக ரெயில்வே தண்ட வாளம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் ரெயில்வே தண்டவாளம் சேதமடைந்த காரணத்தினால் நெல்லை-திருச்செந்தூர் வரையிலான அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களும் நாளை (31-ந்தேதி) வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில் ரெயில்கள் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 5-ந்தேதி வரை அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • கடந்த 17-ந் தேதி முதல் தூத்துக்குடி ரெயில் நிலையத்திற்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
    • சென்னையில் இருந்து 5 நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த மிக கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் தூத்துக்குடி ரெயில் நிலையம் மற்றும் ரயில்வே தண்டவாளங்களையும் மழை நீர் சூழந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி முதல் தூத்துக்குடி ரெயில் நிலையத்திற்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ரெயில் நிலையம் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிய தொடங்கி உள்ளது. இதனால் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது.

    அதேபோல் சென்னையில் இருந்து 5 நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது. அப்போது முத்துநகர் எக்ஸ்பிரஸ் பயணிகள் கூறும்போது, தாங்கள் 5 நாட்களுக்குப் பிறகு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயில் மூலம் வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

    • நெல்லையில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
    • மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் கே.டி.சி.நகர் வழியாக 4 வழிச்சாலைக்கு செல்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்தது.

    குறிப்பாக மாநகர பகுதியில் பெருமழையால் அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 3-வது நாளாக விடுமுறை நீடிக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மாநகரில் முக்கிய இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி கிடந்த நிலையில், நேற்று பெரும்பாலான தெருக்களில் வெள்ளம் முற்றிலுமாக குறைந்தது.

    டவுனில் சந்தி பிள்ளையார் முக்கு பகுதியில் இருந்து காட்சி மண்டபம் வரையிலும் தேங்கி கிடந்த மழைநீர் நேற்று மாலை முற்றிலும் வற்றியது. டவுன் கருப்பந்துறை அருகே மேலப்பாளையத்தையும், டவுனையும் இணைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்காக அமைந்திருந்த மேலநத்தம் தரைப்பாலம் கனமழை வெள்ளத்தால் முற்றிலுமாக உருக்குலைந்தது.

    பழையபேட்டை, வழுக்கோடை, தொண்டர் சன்னதி, ஆர்ச் பகுதி, ரத வீதிகள், சந்திப்பு மீனாட்சி புரம், சி.என்.கிராமம், வரதராஜ பெருமாள் கோவில் பகுதி, வண்ணார்சுமார் 4 நாட்களுக்கு பிறகு நெல்லையில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.பேட்டை, முருகன்குறிச்சி, பெருமாள்புரம், கே.டி.சி.நகர், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய வெள்ளம் முழுமையாக வடிந்துவிட்டாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்பது அதிகமாகவே இருக்கிறது. மாநகரில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துவிட்டன.

    அதேபோல் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களான வீட்டு பத்திரம், ஆதார், பான், வங்கி புத்தகம், பள்ளி மாணவர்களுக்கான சான்றிதழ்கள், புத்தகங்கள் உள்ளிட்டவைகளும் முற்றிலும் நாசமாகிவிட்டது. சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிலும், அதன் உள்புறத்திலும் சுமார் 7 அடி வரை தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் அங்கு அமைந்துள்ள தரைத்தள கடைகள் முழுவதும் முற்றிலும் நாசமாகின. சந்திப்பு ம.தி.தா பள்ளியில் வெள்ளம் குளம் போல் தேங்கி கிடக்கிறது.

    நேற்று சந்திப்பு பஸ் நிலையத்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வெள்ளம் முற்றிலுமாக வடிந்தது. மேற்கு பகுதி மற்றும் வடக்கு பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. த.மு. சாலையில் தொடங்கி மதுரை சாலை உடையார்பட்டி வரையிலும் இன்றும் 4-வது நாளாக இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.

    சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் உள்ள மருந்து கடைகள், எலக்ட்ரிக், பேக்கரி, எலக்ட்ரானிக்ஸ், பிளம்பிங், செல்போன், கண் கண்ணாடி, புத்தக கடைகள், ஸ்டூடியோக்கள், ஓட்டல்கள், டீக்கடைகள் என சுமார் ஆயிரம் கடைகளில் மழை வெள்ளமானது புகுந்தது. இதனால் இந்த கடைகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் நாசமாகியது. சுற்றிலும் சி.என்.கிராமம், மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் டி.வி., பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்டவையும் சேதம் அடைந்தது. இவ்வாறாக சந்திப்பு பகுதியில் மட்டும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இங்கு பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் கடும் நெருக்கடிக்கும் இடையே வாடகைக்கு கடைகள் வாங்கி நடத்தி வந்த நிலையில் மழை வெள்ளம் அவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

    இன்னும் ஒருசில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்டவை வரும் நிலையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள்வதற்கு குறைந்தது 2 மாதம் தேவைப்படும் என கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். எனவே அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.

    சுமார் 4 நாட்களுக்கு பிறகு நெல்லையில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட்டுகளில் அதிகாலையில் கார்கள், மோட்டார் சைக்கிள்களில் பொதுமக்கள் வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்தது. இதேபோல் இறைச்சி கடைகள், பாலகங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று மதியத்திற்கு பிறகு நடை மேடை, தண்டவாளங்களில் தேங்கி கிடந்த மழைநீர் முழுமையாக வடிந்தது. எனவே நேற்று மாலையில் யார்டு பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் மீண்டும் ரெயில்கள் ஓட தொடங்கின. அதேபோல் பார்சல் சர்வீஸ், தபால் சேவைகளும் தொடங்கின.

    இன்று மாலை நெல்லையில் இருந்து சென்னைக்கு நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை இயக்கப்பட உள்ளது. செங்கோட்டை-நெல்லை இடையே பயணிகள் ரெயில் இயக்கம் இன்று காலை முதல் தொடங்கியது. தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம், பாலருவி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை இன்று முதல் இயங்குகிறது. தூத்துக்குடிக்கு ரெயில்கள் இயங்கவில்லை. அதேபோல் ஸ்ரீவைகுண்டத்தில் ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் அரிப்பால் திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில், செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவையும் இயக்கப்படவில்லை.

    இதேபோல் நேற்று வரை தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு பொது போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்த நிலையில் இன்று காலை முதல் தென்காசிக்கு பஸ்கள் இயங்கின. அதே நேரத்தில் சங்கரன்கோவிலுக்கு சென்ற பஸ்கள் டவுன் ஆர்ச், மார்க்கெட் வழியாக தச்சநல்லூர் சென்று சங்கரன்கோவில் சென்றது. வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்த பைபாசில் உடையார்பட்டி பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் கே.டி.சி.நகர் வழியாக 4 வழிச்சாலைக்கு செல்கிறது. அதே நேரத்தில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூருக்கு பஸ்கள் இயக்கம் 4-வது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது. வண்ணார்பேட்டை கொக்கிரகுளம் பகுதியில் ஆம்னி பஸ்கள், கனரக லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் தேங்கி கிடந்த வெள்ள நீர் வடிந்துவிட்டது. அதே நேரத்தில் அந்த வழியாக செல்லும் அண்ணா சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    • கனமழை காரணமாக அடுக்குமாடி உள்ளிட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
    • மெட்ரோ ரெயிலில் கடந்த 4-ந்தேதி 82 ஆயிரத்து 370 பேர் பயணம் செய்தனர்.

    சென்னை:

    சென்னையில் கனமழை காரணமாக அடுக்குமாடி உள்ளிட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. இதனால் பொதுமக்கள் பொது போக்குவரத்தை தேடி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    குறிப்பாக மெட்ரோ ரெயில் மற்றும் புறநகர் மின்சார ரெயில்களில் வழக்கத்தை விட கூடுதலான பயணிகள் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரெயிலில் கடந்த 4-ந்தேதி 82 ஆயிரத்து 370 பேர் பயணம் செய்தனர். 5-ந்தேதி 1 லட்சத்து 72 ஆயிரத்து 609 பேரும் பயணம் செய்து உள்ளனர். கடந்த 6-ந்தேதி 2 லட்சத்து 96 ஆயிரத்து 495 பேர் அதாவது ஒரே நாளில் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புயலின் தாக்கத்தால் சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    • மிச்சாங் புயலுக்கு பின்னர் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் சேவை தொடங்கியது.

    சென்னை:

    மிச்சாங் புயலின் தாக்கத்தால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், சொந்த ஊருக்கு செல்ல முடியாத பயணிகள் ரெயில் நிலையங்களிலே தஞ்சம் அடைந்தனர்.

    இந்தநிலையில், மிச்சாங் புயலுக்கு பின்னர் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் சேவை நேற்று மாலை தொடங்கியது. சென்னை சென்டிரலில் இருந்து புதுடெல்லிக்கு செல்லும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயில் (12615) நேற்று மாலை 6.40 மணிக்கு புறப்பட்டது.

    • இன்று இயக்கப்பட்ட அட்டவணைப்படி நாளையும் புறநகர் ரெயில்கள் இயங்கும்.
    • அனைத்து வழித்தடங்களிலும் 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படும்.

    சென்னை புறநகர் ரெயில்கள் இன்று மதியம் 2 மணிக்கு இயங்கத் தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று இயக்கப்பட்ட அட்டவணைப்படி நாளையும் புறநகர் ரெயில்கள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை எழும்பூர்- தாம்பரம்- செங்கல்பட்டு, கடற்கரை- திருவள்ளூர்- அரக்கோணம், சிந்தாதிரிப்பேட்டை- வேளச்சேரி பறக்கும் ரெயில் ஆகிய வழித்தடங்களில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என்ற வீதத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    மேலும், திருவொற்றியூர்- கும்மிடிப்பூண்டி தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரெயில் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
    • பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில் பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்திற்கு (நாகர்கோவில்-தாம்பரம்) சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு அந்த ரெயில் இந்த மாதம் இறுதி வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், வார இறுதி நாள் மற்றும் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரெயில்(06012) அடுத்த மாதம் 3, 10, 17, 24, 31, அடுத்த ஆண்டு ஜனவரி 7, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் சென்னை புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில்(06011) இன்று, அடுத்த மாதம் 4, 11, 18, 25, வருகிற ஜனவரி மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    • கொரோனா பொது முடக்கத்தின் போது நிறுத்தப்பட்டன
    • பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    ஆம்பூர்:

    ஆம்பூரில் உள்ள பல்வேறு தோல் தொழிற்சா லைகள், காலணி தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் அமைந்துள்ளது.

    அதனால் ஆம்பூரிலி ருந்தும் சென்னைக்கு ரெயில் மூலம் பணியாளர்கள் சென்று வருகின்றனர். அதே போல வியாபார நிமிர்த்தமாக ஆம்பூரிலிருந்து, வெளியூர்க ளுக்கும், வெளியூரிலிருந்து ஆம்பூருக்கும் வரும் வியாபாரிகள் ரெயில் சேவையையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

    மேலும், ஆம்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பல்வேறு ஊர்களில் உள்ள கல்லூரிகளுக்கு ரெயில் மூலம் சென்று வருகின்றனர்.

    கடந்த கொரோனா பொது முடக்கத்தின் போது ரெயில், பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டன. பிறகு படிப்படியாக பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

    ஆம்பூர் ரெயில் நிலையத்தில் தடை செய்யப்பட்ட திருப்பதி-மைசூர் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

    அதன்படி திருப்பதி -மைசூர் செல்லும் ரெயில் நேற்று இரவு முதல் ஆம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இதனால் பயணிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கூடூர்- சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
    • சென்னை சென்ட்ரல்- சாய் நகர் ஷீரடி, சென்ட்ரல்- விஜயவாடா, சென்ட்ரல்- அவுரா ரெயில் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய பினாகினி விரைவு ரெயில் (12712) சென்னை சென்ட்ரல்- கூடூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் கூடூரில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.

    விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரெயில் (12711), கூடூர்- சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    இதே போல் சென்னை சென்ட்ரல்- சாய் நகர் ஷீரடி, சென்ட்ரல்- விஜயவாடா, சென்ட்ரல்- அவுரா ரெயில் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    • டெல்லியில் ஜி20 மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
    • ஜி20 மாநாடு நடைபெறுவதால் டெல்லி முழுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

    ஜி20 உச்சி மாநாடு அடுத்த வாரம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு தலைவர்கள் பலர் இதில் கலந்து கொள்கிறார்கள். ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதால் பொது மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உச்சி மாநாடு நடைபெறுவதால், தலைவர்கள் பாதுகாப்பு காரணமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம், பொதுமக்கள் காரணத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

    இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி செப்டம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்களுக்கு ரெயில் சேவைகள் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மூன்று நாட்களுக்கு 207 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுதவிர 36 ரெயில் சேவைகள் குறுகிய காலத்திற்கு இயக்கப்படும் என்று தெரிகிறது. 

    • சேலம் மற்றும் சேலத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் பல நூற்றுக்கணக்கான பயணிகள் தொழில் நகரங்களான ஈரோடு திருப்பூர் தொழில் மற்றும் மருத்துவ நகரமான கோவைக்கு சென்று வந்து கொண்டுள்ளனர்.
    • காலை பணிக்குச் செல்லும் நேரத்திலும், மாலை பணி முடிந்து திரும்பும் நேரத்திலும் எந்த ஒரு வண்டியும் இயக்கப்படாததால் மேற்குறிப்பிட்ட அனைத்து பயணிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி பாராளுமன்றத்தில் பேசியதாவது:-

    ரெயில் சேைவ

    சேலம் மற்றும் சேலத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் பல நூற்றுக்கணக்கான பயணிகள் தொழில் நகரங்களான ஈரோடு திருப்பூர் தொழில் மற்றும் மருத்துவ நகரமான கோவைக்கு சென்று வந்து கொண்டுள்ளனர்.

    இதில் கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், தொழில் முனைவோர், தனியார் துறை பணியாளர்கள், மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு செல்வோர், குறிப்பாக தினக்கூலி பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என அனைவரும் உள்ளனர்

    இந்நிலையில், சேலத்திலிருந்துஅதிகாலை 5.22 மணிக்கு வண்டி எண் 13351 ஆலப்புழா எக்ஸ்பிரசிற்கு பிறகு 9.45 மணிக்கு வண்டி எண் 12626 கேரளா எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இடைப்பட்ட சுமார் 4 மணி 30 நிமிடங்களுக்கு எந்த வண்டியும் இயக்கப்படுவதில்லை.கோவையிலிருந்து மாலை 4.25 மணிக்கு 17229 சபரி எக்ஸ்பிரஸ் மற்றும் இரவு 8 மணிக்கு 16382 புனே எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப் படுகிறது. இடைப்பட்ட சுமார் 4 மணி நேரத்திற்கு எந்த வண்டியும் இயக்கப்படுவதில்லை.

    பாதிப்பு

    இதனால், காலை பணிக்குச் செல்லும் நேரத்திலும், மாலை பணி முடிந்து திரும்பும் நேரத்திலும் எந்த ஒரு வண்டியும் இயக்கப்படாததால் மேற்குறிப்பிட்ட அனைத்து பயணிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    குறிப்பாக, தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிக்குச் செல்லும் பணியாளர்கள் பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலையில் அவர்களின் வருமானத்தில் பெரும் பகுதி பேருந்து பயணச்செலவிற்கே செலவிட வேண்டி இருப்பதால் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    ஆகவே, ஈரோட்டில் இருந்து கோவைக்கு காலை 7.50 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06801-யை சேலத்தில் இருந்து காலை சுமார் 7 மணி அளவில் புறப்படுமாறும், மறுமார்கமாக, கோவையி லிருந்து மாலை 6.10 மணிக்கு ஈரோட்டிற்கு புறப்படும் வண்டி எண் 06800-யை சேலம் வரை நீட்டித்து இயக்க பரிந்துரைத்து, அதற்குண்டான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×