செய்திகள்

மாணவர்கள் விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Published On 2018-03-27 11:33 GMT   |   Update On 2018-03-27 11:33 GMT
விளையாட்டில் சாதனை படைத்து நாட்டுக்கு மாணவ-மாணவிகள் பெருமை சேர்க்க வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
சிவகாசி:

சிவகாசியில் ஆர்.எஸ்.ஆர். பேட்மிட்டன் அகடாமி சார்பாக புதிய இறகுபந்து உள்விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து பேசியதாவது:-

தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா விளையாட்டு துறையை ஊக்கப்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அதேபோன்று அவரது சீரிய எண்ணம் இந்த ஆட்சியிலும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தவர்களை தமிழக அரசு அதிகளவில் கவுரவப்படுத்தி வருகிறது. மாணவ, மாணவியர் விளையாட்டு துறையிலும் தொடர்ந்து சாதனை படைத்திட வேண்டும்.

மாணவர்கள் விளையாட்டில் ஊக்கம் காட்டினால் தமிழகத்திற்கு பெருமையாக அமைந்திடும். கல்வித் துறையை போல விளையாட்டு துறைக்கு அதிகளவில் ஊக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் பயன்படுத்தி விளையாட்டு துறையில் சிறந்து விளங்க வேண்டும்.

இதன்மூலம் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அளவில் பெருமைகளை தேடி தரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.ஆர். பேட்மிட்டன் அகடாமி சண்முகையா, அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் ராஜவர்மன், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். #Tamilnews
Tags:    

Similar News