செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 3,303 காச நோயாளிகள் உள்ளனர்- அமைச்சர் சீனிவாசன் தகவல்

Published On 2018-03-24 10:11 GMT   |   Update On 2018-03-24 10:11 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் 3,303 காச நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்:

உலக காச நோய் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட காசநோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் வினய் முன்னிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த வருடம் 2017-ல் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) 3,303 காச நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 1734 பேர் சளியில் கிருமி உள்ளவர்கள், கடந்த வருடத்தில் சளியில் கிருமி உள்ளவர்கள் 90 சதவீதம் பேர் காச நோயிக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுமருந்து சிகிச்சை எதிர்ப்பு காச நோய் சிகிச்சையும் தற்போது 70 நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மருந்துகளுக்கு கட்டுப்படாத காசநோயை கண்டறிய அதிநவீன முறை நமது மாவட்டத்தில் உள்ளதால், மாதத்திற்கு சுமார் 150 நபர்களுக்கு இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. ஓர் நபருக்கு பரிசோதிக்க செலவாகும் தொகை சுமார் ரூ.2500 ஆகும். இந்த பரிசோதனையை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலமாக காசநோயாளி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை காலம் முழுவதும் மாதம் ரூ.1000 ஓய்வூதியம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர். பரமசிவம் எம்.எல்.ஏ., நலப்பணிகள் இணை இயக்குநர் மாலதிபிரகாஷ், நகர் நல அலுவலர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
Tags:    

Similar News