செய்திகள்

கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு மோர்

Published On 2018-03-16 07:33 GMT   |   Update On 2018-03-16 07:33 GMT
சென்னையில் 2500 போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர். அவர்களுக்கு காலை, மாலை இரு வேளையும் 5 ஆயிரம் ஆவின் மோர் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்பட உள்ளது.
சென்னை:

கோடை வெயில் இப்போதே வாட்டி எடுக்க தொடங்கிவிட்டது. மார்ச் மாதம் பிறந்த உடனேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துவிட்டது.

சென்னையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் இந்த வெயிலால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தினமும் 2 முறை மோர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மெரினாவில் இன்று இதனை தொடங்கி வைத்தார்.

சென்னையில் 2500 போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர். அவர்களுக்கு காலை, மாலை இரு வேளையும் 5 ஆயிரம் ஆவின் மோர் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்பட உள்ளது.

மோர் வழங்கும் நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமி‌ஷனர்அருண், இணை கமி‌ஷனர்கள் நஜ்முல் கோடா, சுதாகர், துணை கமி‌ஷனர் சாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். #tamilnews
Tags:    

Similar News