செய்திகள்

இதமான சீசன் - கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Published On 2018-03-03 07:56 GMT   |   Update On 2018-03-03 07:56 GMT
கோடை சீசன் அறிகுறியாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அனைத்து இடங்களிலும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 2 மாதங்களாகவே பணியின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே காணப்பட்டது. இதனால் சுற்றுலா இடங்களான மோயர்பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா உள்ளிட்டவை வெறிச்சோடியே காணப்பட்டது. தற்போது பணியின் தாக்கம் குறைந்து பகலில் வெயிலும் இரவு நேரத்தில் லேசான குளிரும் என இதமான தட்பவெப்பம் நிலவி வருகிறது.

தமிழகத்தில் தற்போது பிளஸ்-2 தேர்வு நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். இருந்தபோதும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

கோடை கால சீசன் தொடங்கியுள்ளதால் ஓட்டல் உரிமையாளர்கள் வியாபாரிகள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மார்ச் மாத பிற்பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அனைத்து இடங்களிலும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. #tamilnews

Tags:    

Similar News