செய்திகள்

ஐ.டி. பெண் ஊழியரை தாக்கிய ரவுடி மீது குண்டர் சட்டம்

Published On 2018-03-02 08:56 GMT   |   Update On 2018-03-02 08:56 GMT
சென்னை பெரும்பாக்கத்தில் ஐ.டி. பெண் ஊழியர் லாவண்யாவை இரும்பு கம்பியால் தாக்கி கொள்ளையடித்த ரவுடி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை பெரும்பாக்கத்தில் ஐ.டி. பெண் ஊழியர் லாவண்யாவை இரும்பு கம்பியால் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ரவுடி விநாயக மூர்த்தி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் விநாயக மூர்த்தி மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது. அவர்தான் லாவண்யாவை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதன்படி விநாயகமூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவரை ஓராண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதே போல மேலும் 10 ரவுடிகள் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குமரன் நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேபிள் டி.வி. அதிபர் கந்தன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய படைப்பை பாண்டி உள்ளிட்ட 6 பேரும் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளனர்.

அரும்பாக்கத்தை சேர்ந்த நாகூர் கனி, அசோக்நகரை சேர்ந்த நிஷாந்த் உள்ளிட் டோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News