செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிராக ஒற்றுமையாக செயல்பட வேண்டும்- தமிழக அரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள்

Published On 2018-02-24 03:27 GMT   |   Update On 2018-02-24 03:27 GMT
காவிரி பிரச்சினையை போன்று நீட் தேர்வுக்கும் எதிராக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என தமிழக அரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக தலைமை செயலகத்தில் நடந்த காவிரி நதிநீர் பங்கீடு உரிமை மீட்டெடுப்புக்கான அனைத்துக்கட்சிகள், விவசாய அமைப்புகள் ஆகியவைகளை அழைத்து தமிழக அரசு நடத்திய கூட்டம் ஒரு புதிய வரலாறு படைத்த கூட்டம் ஆகும். இப்பிரச்சினை மட்டும் அல்ல, நீட் தேர்வுக்கான விலக்குப்பெறும் உரிமை, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரும் பொறுப்பு உரிமை, தமிழக மீனவர்கள் பிரச்சினை போன்ற பல மாநில உரிமைகள் மீட்டெடுப்பிலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை, முன்னெடுத்து செல்ல வேண்டிய முக்கிய கடமையும், பொறுப்பும் அனைவருக்கும் உண்டு. தேர்தல் களத்தில் நிற்கும்போது வேண்டும் என்றால், எதிர் எதிர் நின்று ஒருவரை ஒருவர் வென்றிட முயலலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கி.வீரமணி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘நீட்’ தேர்வு விலக்கு குறித்த சிறப்பு பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதில், சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஏ.கே.ராஜன், அரிபரந்தாமன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்’ என்று கூறியுள்ளார். #tamilnews
Tags:    

Similar News