செய்திகள்

திருவேற்காட்டில் கூவம் கரையோரத்தில் இருந்த வீடுகள் இடிப்பு

Published On 2017-12-12 09:55 GMT   |   Update On 2017-12-12 09:55 GMT
திருவேற்காட்டில் கூவம் கரையோரத்தில் இருந்த 47 வீடுகள் இன்று வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, தாசில்தார் ரமா முன்னிலையில் இடிக்கப்பட்டது.

பூந்தமல்லி:

கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப் பணித்துறை அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள்.

கூவம் மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படுகின்றன. அங்கு குடியிருந்தவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்படுகிறது.

திருவேற்காடு வீரராகவ புரத்தில் உள்ள கூவம் ஆற்றங்கரையோரத்தில் 47 வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் அவர்கள் காலி செய்யவில்லை. நேற்று வீடுகளை அகற்ற அதிகாரிகள் சென்றபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத் தினார்கள். ஆனால் நேற்று வீடுகள் அகற்றப்படவில்லை.

இன்று வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, தாசில்தார் ரமா முன்னிலையில் 47 வீடுகள் இடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வசித்தவர்கள் தங்களது பொருட்களை எடுத்து கொண்டு பெரும்பாக்கத்தில் வழங்கப்பட்ட மாற்று இடத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

வீடுகள் இடிப்பு காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News