search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூவம் கரையோரம்"

    • நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரை 14,300 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • வளசரவாக்கம் ரெயில் நகர் பாலம் முதல் மாநகராட்சி எல்லை வரை மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    சென்னை:

    சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அடையாறு, கூவம் போன்ற ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை சமப்படுத்துதல், திடக்கழிவுகளை அகற்றுதல், மரக்கன்றுகளை நடுதல் மற்றும் தடுப்பு வேலிகளை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக ராயபுரம், அம்பத்தூர் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட கூவம் ஆற்றங்கரையோரங்களில் 4 பகுதிகளில் கரைகளை சமப்படுத்தி, பாரம்பரிய மரக்கன்றுகளான அரச மரம், ஆலமரம், மகிழம், மலைவேம்பு, அசோகமரம், பூவரசு, புங்கன், கல்யாண முருங்கை, மருத மரம், புன்னை, வேம்பு, இலுப்பை, கொய்யா, நொச்சி உட்பட 43 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.

    இதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு தற்சமயம் கரைகளை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ராயபுரம் மண்டலம், வார்டு-59க்குட்பட்ட கூவம் ஆற்றங்கரையோரங்களில் காயிதே மில்லத் பாலம் முதல் லாஸ் பாலம் வரை 2.12 கி.மீ. நீளத்திற்கு 22,990 ச.மீ. பரப்பளவில் ரூ.1.73 கோடி மதிப்பீட்டில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரை 2.1 கி.மீ. நீளத்திற்கு ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் 14,300 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    மதுரவாயல் தாய் மூகாம்பிகை பல் மருத்துவமனை கல்லூரி வளாகம் முதல் பாடிக்குப்பம் மயான பூமி வரை 1.3 கி.மீ. நீளத்திற்கு 11,800 ச.மீ. பரப்பளவில் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் 14,050 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    வளசரவாக்கம் ரெயில் நகர் பாலம் முதல் மாநகராட்சி எல்லை வரை 5.7 கி.மீ. நீளத்திற்கு ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் 21,313 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    ராயபுரம் மண்டலம், வார்டு-59க்குட்பட்ட காயிதே மில்லத் பாலம் முதல் லாஸ் பாலம் வரை மற்றும் வார்டு-60க்குட்பட்ட நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரை கூவம் ஆற்றங்கரையின் சரிவுகளில் அலையாத்தி இனத்தாவர வகைகள் நடவு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ×